ஐ-போன் உற்பத்தி மையமாகும் இந்தியா: வேதாந்தா அறிவிப்பு

இந்தியாவில் ஐ-போன் உற்பத்தியைத் தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 
ஐ-போன் உற்பத்தி மையமாகும் இந்தியா: வேதாந்தா அறிவிப்பு

இந்தியாவில் ஐ-போன் உற்பத்தியைத் தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களை உற்பத்தி செய்ய மகாராஷ்டிரத்தில் உற்பத்தி மையம் தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தைவானின் மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கானுடன் இணைந்து குஜராத்தில் செமிகண்டக்டா் தொழிற்சாலை மற்றும் மின்னணு சாதனங்களுக்கான திரை தயாரிப்புப் பிரிவை வேதாந்தா நிறுவனம் தொடங்கவுள்ளது. 

இதற்கான அறிவிப்பு மற்றும் ஒப்பந்தம்  மாநில முதல்வா் பூபேந்திர படேல், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று (செப்.13) கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து இன்று மகாராஷ்டிரத்தில் ஐ-போன் மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய வேதாந்தா நிறுவனத் தலைவர் அனில் அகர்வால், ''தைவானில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்திக்கு நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் செமிகண்டக்டா் மற்றும் மின்னணு சாதனங்களுக்கான திரை தயாரிக்கப்படும். 

இதேபோன்று மேற்கு இந்தியாவில் ஐ-போன் மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களைத் தயாரிப்பதற்கான உற்பத்தி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குஜராத் ஆலையின் முன்னோட்ட ஒருங்கிணைப்பாக செயல்படும்'' எனத் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com