
பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, உலகின் மிகப்பெரிய ரத்ததான முகாமை முதல்வர் பூபேந்திர படேல் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
அகமதாபாத்தில் அகில் பாரதிய தேராபந்த் யுவ பரிஷத் 'மெகா ரத்த தான இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் பிறந்தநாளில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முதல்வர் படேல் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அரசின் திட்டங்களை நாட்டின் சாமானிய மக்களைச் சென்றடையப் பிரதமர் மோடி எப்போதும் முயற்சி செய்து வருகிறார். மக்கள் நலத்திட்டங்கள் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.