
உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவில் திங்கள்கிழமை காலை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் திலிப் கோண்ட்(35), அவரது மனைவி சாந்தினி (30) இருவரும் கூலித்தொழிலாளிகள். அவர்களது 2 வயது மகள் பாயல் ஆகியோர் உயிரிழந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா தெரிவித்தார்.
சத்யபிரகாஷ் பரன்வால் என்ற வியாபாரிக்குச் சொந்தமான 2 மாடி வீட்டின் தரை தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென பெய்த கனமழையால் சுவர்களின் அதிக ஈரப்பதம் காரணமாக வீடு இடிந்து விழுந்தது.
மூன்று மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு தீயணைப்புப் படை வீரர்கள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூவரின் உடல்களை மீட்டனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தபோது கோண்டின் தாய் பிரபாவதி (65) வீட்டிற்கு வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.