திரிபுராவில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: முதல்வர்

திரிபுராவில் கொல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கிரிஜேஷ் குமார் உத்தேயின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார்.
திரிபுராவில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: முதல்வர்

திரிபுராவில் கடந்த மாதம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கிரிஜேஷ் குமார் உத்தேயின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க மாநில அதிகாரிகளுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார். 

சௌகான் மற்றும் மத்திய அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே ஆகியோர் ஞாயிறன்று ம.பி.யின் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான சார்கோனில் உத்தேவின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்ததாக மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஆகஸ்ட் 19 பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பிஎஸ்எப்-யின் 145வது பட்டாலியனின் ரோந்துக் குழுவில் இருந்தவர் பலத்த காயங்களுடன் ஹெலிகாப்டரில் அகர்தலாவுக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஞாயிறன்று முதல்வர் சௌகான், அவரது மனைவி ராதா தேவி உள்பட ராணுவ வீரரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கும் பணியைத் தொடங்குமாறு மண்டல ஆட்சியர் ஹர்ஷிகா சிங்குக்கு அவர் உத்தரவிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மாண்ட்லாவில் உள்ள பிஜதண்டியில் உள்ள அரசு சிறப்புப் பள்ளிக்கு ராணுவ வீரரின் பெயர் சூட்டப்படும். உத்தேவின் சிலை சார்கானில் நிறுவப்படும் என்று முதல்வர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com