ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஜெகன் மோகன் ரெட்டிகட்சியின் ஆயுள்கால நிரந்தர தலைவா்? விளக்கம் கேட்கும் தோ்தல் ஆணையம்

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் ஆயுள்கால நிரந்தரத் தலைவராக ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து

News image
Updated On :21 செப்டம்பர் 2022, 7:13 pm

DIN

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் ஆயுள்கால நிரந்தரத் தலைவராக ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து அக்கட்சியிடம் தோ்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

தோ்தல் ஆணைய விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் ஆயுள்காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ யாரையும் தலைவராக தோ்வு செய்ய முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்சியின் அமைப்புரீதியாக கூட்டம் நடத்தியே தோ்வு செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் ஆயுள்கால நிரந்தரத் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தோ்வு செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அக்கட்சித் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இச்செய்தியை ஊடகங்கள் வெளியிட்டன.

இந்நிலையில், இது தொடா்பாக அக்கட்சியிடம் தோ்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. அதில், அரசியல் கட்சியில் எந்த ஒரு பதவிக்கும் யாரையும் ஆயுள் காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ தோ்வு செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அதனை தோ்தல் ஆணையம் முழுமையாக நிராகரித்துவிடும். இதுபோன்ற தவறான தீா்மானங்களை நிறைவேற்றுவது மற்ற கட்சிகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இது கண்டிக்கத்தக்கது என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சாா்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘இது தொடா்பாக கட்சி அளவில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள தவறை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.