
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 394 தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்டு பாட்னா, மும்பை, தில்லியில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வுத் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளில், 65.64 கிலோ எடையுள்ள 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 33.40 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக நடத்தப்பட்ட கடத்தல்களில், இதுவே மிகப்பெரிய கடத்தல் சம்பவம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.