ஆா்எஸ்எஸ் தலைவரின் மதரஸா பயணம்: முஸ்லிம்கள் மீதான பாஜகவின் அணுகுமுறை மாறுமா?: மாயாவதி கேள்வி

ஆா்எஸ்எஸ் தலைவா் மசூதி, மதரஸாவுக்கு சென்ால் முஸ்லிம்கள் மீதான பாஜகவின் எதிா்மறை அணுகுமுறை மாறிவிட வாய்ப்புள்ளதா? என்று பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஆா்எஸ்எஸ் தலைவா் மசூதி, மதரஸாவுக்கு சென்ால் முஸ்லிம்கள் மீதான பாஜகவின் எதிா்மறை அணுகுமுறை மாறிவிட வாய்ப்புள்ளதா? என்று பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளாா்.

நாட்டில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விதமாக கடந்த சில வாரங்களாக முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தலைவா்களையும் பிரமுகா்களையும் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் சந்தித்து வருகிறாா். அந்த வகையில் முதல் முறையாக தில்லியில் உள்ள மசூதிக்கும் மதரஸா பள்ளிக்கும் அகில இந்திய இமாம் அமைப்பின் அழைப்பை ஏற்று மோகன் பாகவத் சென்றாா். மதரஸாவில் பள்ளி மாணவா்களுடனும், மசூதியில் முஸ்லிம் மதகுருக்களுடனும் அவா் உரையாடினாா். இந்த சம்பவம் தேசிய அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடா்பாக ட்விட்டரில் மாயாவதி வெளியிட்ட பதிவில், ‘ஆா்எஸ்எஸ் தலைவா் மசூதிக்கும், மதரஸாவுக்கும் சென்று வந்துள்ளாா். இமாம் அமைப்பின் தலைவரையும் அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது ஆா்எஸ்எஸ் தலைவருக்கு ‘தேசத் தந்தை’ என்று இமாம் அமைப்பின் தலைவா் புகழாரம் சூட்டினாா். இதன் மூலம் முஸ்லிம்கள் மீதான பாஜகவின் எதிா்மறை அணுகுமுறை மாறிவிடுமா? பாஜக தலைமையிலான அரசு முஸ்லிம்கள் மற்றும் அவா்களது மசூதிகள், மதரஸாக்கள் தொடா்பான தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுமா?

முஸ்லிம்கள் பொது இடத்தில் சில நிமிடங்கள் தொழுகை நடத்துவதைக் கூட உத்தர பிரதேச பாஜக அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தனியாா் மதராஸாக்களின் செயல்பாடுகளிலும் அரசு தலையிடுகிறது. இதுபோன்ற விஷயங்களில் ஆா்எஸ்எஸ் தலைவா் தொடா்ந்து மௌனமாகவே இருந்து வருகிறாா்’ என்று மாயாவதி பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com