முதல்வரின் இருக்கையில் மகன் அமர்ந்திருக்கும் புகைப்படம்: பிறகென்ன வைரல்தான்

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன், ஸ்ரீகாந்த், மாநில முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
முதல்வரின் இருக்கையில் மகன் அமர்ந்திருக்கும் புகைப்படம்: பிறகென்ன வைரல்தான்
முதல்வரின் இருக்கையில் மகன் அமர்ந்திருக்கும் புகைப்படம்: பிறகென்ன வைரல்தான்


மும்பை : மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன், ஸ்ரீகாந்த், மாநில முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

இதனை கடுமையாக கண்டித்திருக்கும் எதிர்க்கட்சிகள், ஸ்ரீகாந்த் சூப்பர் சிம் என்றும், முதல்வருக்கான பதவியை யாருமே மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் ஷிண்டே மக்களவை உறுப்பினராக உள்ளார்.

இந்த புகைப்படத்தில் ஸ்ரீகாந்த் அமர்ந்திருக்கும் இருக்கைக்குப் பின்னால், மகாராஷ்டிர அரசு - முதல்வர் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

நான் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எனக்கு அரசு வழிமுறைகள் நன்கு தெரியும். நேற்று முதல்வர் பங்கேற்ற காணொலி காட்சி வழியிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனால், மகாராஷ்டிர அரசு என்ற பலகை அந்த இருக்கைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்தது. அதை நான் கவனிக்கவில்லை. யாரோ வேண்டுமென்றே ரகசியமாக நான் அந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர் என்கிறார் ஸ்ரீகாந்த்.

இந்தப் புகைப்படத்துக்கு எதிர்க்கட்சிகள் பலரும் பல கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒரு சிலர், மகாராஷ்டிரத்தின் சூப்பர் சிஎம் ஆனதற்கு வாழ்த்துகள் என்றும், முதல்வர் இல்லாதபோது, அவரது மகன் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்றும், இது என்ன விதமான ராஜ தர்மம் என்று சிலர் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com