புதிய சாலையில் திடீர் பள்ளம்! சிக்கியது இருசக்கர வாகனம்

புதிய சாலையில் திடீர் பள்ளம்! சிக்கியது இருசக்கர வாகனம்

காலை லாரியைப் பின்தொடர்ந்து சென்ற இருசக்கர வாகனம் (ஸ்கூட்டி) திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனை ஓட்டிச்சென்ற நபர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார். 
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் புதிதாக போடப்பட்டிருந்த சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்தார். இதில் இருசக்கர வாகனம் முழுவதுமாக பள்ளத்தில் சிக்கியது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ரயில் நிலையம் அருகே சமீபத்தில் புதிதாக சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. 

இந்நிலையில், இன்று காலை லாரியைப் பின்தொடர்ந்து சென்ற இருசக்கர வாகனம் (ஸ்கூட்டி) திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனை ஓட்டிச்சென்ற நபர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார். 

அவரை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடைத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர். 

அந்த சாலை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை மீட்கும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com