
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்த இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் நிகழ்வாண்டில் முதல்முறையாக நடைபெற்றது.
முதுநிலை படிப்புகளுக்காக தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கு 3.5 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 55 சதவிகிதம் பேர் தேர்வெழுதினர்.
இந்நிலையில், முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் https://cuet.nta.nic.in தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.