
நிதி மோசடி தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கொல்கத்தாவில் 3 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி வருகிறது.
சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவின் 3 குழுக்கள் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அவற்றின் முதல் குழு தெற்கு கொல்கத்தாவில் உள்ள 255 ஜோத்பூர் பூங்கா சாலையில் உள்ள பட்டய கணக்காளர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றடைந்தனர். பட்டய கணக்காளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
ஐந்து அதிகாரிகளைக் கொண்ட இரண்டாவது குழு, கணேஷ் சந்திரா அவென்யூவில் உள்ள அதே பட்டயக் கணக்காளரின் அலுவலகத்தில் விசாரித்து வருகின்றனர்.
கிழக்கு மாநகர புறவழிச்சாலையை ஒட்டியுள்ள பட்டய கணக்காளரின் இரண்டாவது அலுவலகத்தில் 6 அதிகாரிகள் கொண்ட மூன்றாவது குழு சோதனை நடத்தி வருகிறது.
மேலும், சிட் ஃபண்ட் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் சிபிஐ விசாரணையில் எந்தவித பதிலும் கூறாமல் மௌனமாக இருந்ததாகக் கூறி நான்கு பேரை திங்களன்று கைது செய்தனர்.
நிதி மோசடி தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை முதல் சிபிஐ சோதனைகள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.