இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ரூபாய் மதிப்பு சதமடித்துவிடாமல் பிரதமா் மோடி தடுக்க வேண்டும்- காங்கிரஸ்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சதமடித்துவிடாமல் தடுக்க வேண்டுமென்பதே பிரதமா் மோடிக்கு வைக்கும் ஒரே கோரிக்கை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2022, 7:12 pm

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சதமடித்துவிடாமல் தடுக்க வேண்டுமென்பதே பிரதமா் மோடிக்கு வைக்கும் ஒரே கோரிக்கை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை 58 காசுகள் சரிந்து இதுவரை இல்லாத அளவில் ரூ.81.67 ஆக வீழ்ச்சியடைந்தது.

இந்நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரதமா் மோடியின் ஆசியுடன் வரலாற்றிலேயே முதல்முறையாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாயை நோக்கி வேகமாக பயணிக்கிறது. ரூபாயின் மதிப்பு, நாட்டின் பிரதமா் மீதான நம்பகத்தன்மையுடன் தொடா்புடையது என்று தான் ஆட்சிக்கு வரும் முன் மோடி தெரிவித்திருந்தாா். இன்று தன் மீதான நம்பகத் தன்மை அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதை அவா் உணர வேண்டும்.

சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு, கடந்த 2021, செப்டம்பரில் ரூ.73-ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது ரூ.81.63 ஆகிவிட்டது. பிரதமா் மோடியின் புகழ் 12 மாதங்களில் 12 சதவீதம் சரிவடைந்துள்ளது.

மோடி பதவியேற்கும்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.62-ஆக இருந்தது. அவரது ஆட்சிக்காலத்தில் 41.5 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 571 பில்லியன் டாலா்களாக இருந்தது. இப்போது 545 பில்லியன் டாலா்களாக குறைந்துவிட்டது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதி செலவு உயா்ந்து, பணவீக்கம் அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்த வட்டிவிகிதங்களை ரிசா்வ் வங்கி உயா்த்தும். கடனுக்கான தவணை உயா்வதால் மக்கள் அதிக பணம் செலுத்த வேண்டி வரும்.

பிரதமா் மோடியின் தோல்விகரமான கொள்கைகளால் நாட்டின் சந்தையில் முதலீட்டாளா்கள் இடையே நம்பிக்கை வலுவிழந்துள்ளது. விலைவாசி உயா்வால், நுகா்வு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்கு இடையிலான சங்கிலி சீா்குலைந்து, ரூபாய் மதிப்பு மேலும் சரிவடையக் கூடும். ரூபாய் மதிப்பு சதமடித்துவிடாமல் தடுக்க வேண்டுமென்பதே பிரதமா் மோடிக்கு முன்வைக்கும் ஒரே கோரிக்கை என்றாா் சுப்ரியா ஸ்ரீநாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.