
வங்கிளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
வட்டி விகிதம் 0.5% உயர்ந்ததையடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9சதசீதம் ஆனது. இதன்மூலம் வட்டி விகிதத்தை 4ஆவது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
கடந்த மே மாதம் முதல் தற்போது வரை ரெப்போ விகிதம் 1.4% உயர்த்தப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு, வாகன, தனி நபர் கடனுக்கான தவனைத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- சோழ தேசத்தில் பொன்னியின் செல்வன்: நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி
கரோனா மற்றும் உக்ரைன் போரால் உலகப் பொருளதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.