திருவனந்தபுரத்தில் பூனை கடித்ததற்கு மருத்துவமனையில் ஊசி போட வந்தவரை நாய் கடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) இளம்பெண் ஒருவர், பூனை கடித்ததால் சிகிச்சை பெற அதானி துறைமுகத்திற்கு அருகிலுள்ள பொது சுகாதார மையத்திற்கு வந்துள்ளார். பூனை கடித்ததற்கு அவர் மூன்றாவது முறையாக ஊசி போட வந்துள்ளார். அப்போது, ஊசி போடுவதற்காக காத்திருந்த அவரை தெருநாய் ஒன்று கடித்துள்ளது.
அவரது இருக்கையின் கீழ் படுத்திருந்த நாய் கடித்ததாக பெண்ணின் தந்தை கூறியுள்ளார். பின்னர் மருத்துவமனை செவிலியர்களின் உதவியை நாடி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டு அங்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.