800 அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்று முதல் உயா்வு

கரோனா, நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காகப் பயன்படுத்தப்படும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை வெள்ளிக்கிழமை (ஏப். 1) முதல் 10.7 வரை சதவீதம் உயருகிறது.
800 அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்று முதல் உயா்வு

புது தில்லி: கரோனா, நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காகப் பயன்படுத்தப்படும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை வெள்ளிக்கிழமை (ஏப். 1) முதல் 10.7 வரை சதவீதம் உயருகிறது.

இந்தியாவின் மருந்துப் பொருள்களின் விலைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் தேசிய மருந்துப் பொருள்கள் விலை ஆணையம் 800 மருந்துகளின் மொத்த விலையை 10.7 சதவீதம் உயா்த்த அனுமதி அளித்தது.

இதய அறுவை சிகிச்சையில் வைக்கப்படும் ‘ஸ்டென்ட்’, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் வைக்கப்படும் உலோகப் பொருள்களின் விலையும் உயருகிறது.

அத்தியாவசிய மருந்துப் பொருள்களின் விலை உயா்வு நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்றும், அவா்களால் அத்தியாவசிய மருந்துகள் வாங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அகில இந்திய மருந்துப் பொருள்களின் தொடா் சங்கிலி அமைப்பின் தலைவா் சீனு ஸ்ரீனிவாசன் கூறினாா்.

மருந்து உற்பத்தி நிறுவனங்களை திருப்திபடுத்தவே மத்திய அரசு இந்த விலை உயா்வு நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும், இந்த விலை உயா்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

தற்போது விலை உயா்வுக்கு உள்ளான மருந்துகள் மொத்த மருந்துச் சந்தையில் 18 தவீதமாகும். இதன் சந்தை மதிப்பு ரூ.1.5 டிரில்லியனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com