அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

இந்தியா வந்தார் நேபாள பிரதமர்: ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கருடன் மாலை சந்திப்பு

நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு இன்று வருகை புரிந்துள்ளார். இன்று மாலை அவர், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசவுள்ளார். 

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 6:19 am

DIN


நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு இன்று வருகை புரிந்துள்ளார். இன்று மாலை அவர், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசவுள்ளார். 

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷர்மா ஓலி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமராக பதவியேற்றுள்ள  ஷோ் பகதூா் தாபா இந்தியாவிற்கு வருகைபுரிந்துள்ளார். 

நேபாளத்தில் புதிதாக பதவியேற்றுள்ள ஷோ் பகதூா் தேவுபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததன் பேரில் அவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

முதல் நாள் பயணத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார். 

இரண்டாம் நாள் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அரசுமுறை நிகழ்ச்சிகள் தவிர, பிரதமா் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசிக்கும் நேபாள பிரதமா் செல்லவுள்ளாா்.

இந்த சந்திப்பில் நேபாளம் - இந்தியா இடையேயான வணிகம், நட்புறவு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் தேதி நேபாளம் திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.