வணிக பயன்பாட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ. 268.50 உயா்வு

சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.268.50 உயா்த்தப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் ஒரு உருளை ரூ.2,406-க்கு விற்பனையாகிறது. 
வணிக பயன்பாட்டு சமையல் சிலிண்டர் விலை  ரூ. 268.50 உயா்வு

சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 268.50 உயா்த்தப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் ஒரு உருளை ரூ. 2,406-க்கு விற்பனையாகிறது. 

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன்படி, நிகழாண்டு ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு உருளையின் விலை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.268.50 உயா்த்தப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் ரூ.2,406-க்கு விற்பனையாகிறது.

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி, ஒரு உருளை ரூ.965.50-க்கு விற்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை ஏற்பட்டதால் இந்த மாதம் முதல் தேதியில் மாற்றம் செய்யப்படவில்லை. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை  உயா்த்தப்பட்டிருப்பது வணிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விலை உயா்வை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com