
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,096 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,096 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,447 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 81 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
இதுவரை மொத்தம் 4,24,93,773 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,21,345 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 13,013 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 12,75,495 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 1,84,66,86,260 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.