நில மோசடி வழக்கு: சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத்தின் சொத்துகள் முடக்கம்

நில மோசடி வழக்கில் தொடர்புடையதாக மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
நில மோசடி வழக்கு: சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத்தின் சொத்துகள் முடக்கம்

நில மோசடி வழக்கில் தொடர்புடையதாக மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மும்பையில் கட்டுமானப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1,034 கோடி மதிப்பிலான நிலத்தில்  மோசடியில் ஈடுபட்டதாக சிவசேனைக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

முன்னதாக, சிவசேனை கட்சித் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகனும் அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே மற்றும் அமைச்சர் அனில் பிரப் ஆகியோரது வீடுகளிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதற்கு முன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீமின் கூட்டாளிகளுக்குப் பணப் பரிவா்த்தனை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினா் விவகார அமைச்சா் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அமலாக்கத் துறையின் சஞ்சய் ராவத்தின் சொத்துகளை முடக்கியுள்ளது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com