நீட் தேர்வு எழுதும் நேரம் நீட்டிப்பு: இனி கூடுதால 20 நிமிடங்கள்!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதும் நேரம் நீட்டிப்பு: இனி கூடுதால 20 நிமிடங்கள்!


இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்று வந்த  நீட் தேர்வு, நடப்பாண்டு முதல் 3 மணி 20 நிமிடங்கள் நடைபெறும்.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கத்தில், 200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. தவறான கேள்விகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விடைகளுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

 நடப்பாண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. 2016ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த நீட் தேர்வில் இதுவரை 3 மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில்20 நிமிடங்கள் கூடுதாக வழங்கி 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com