போதைக்காக மட்டும் மக்கள் கோவா வருவதில்லை, இதற்காகவும் தான்: டிஜிபி

கோவா மாநிலத்திற்கு போதைக்காக மட்டும் மக்கள் வருவதில்லை, கடற்கரை, உணவு, கலசாரம் போன்றவற்றுக்கும் வருகிறார்கள் என்று புதிய மாநில தலைமை இயக்குனர் ஜஸ்பால் சிங் கூறுகிறார். 
போதைக்காக மட்டும் மக்கள் கோவா வருவதில்லை, இதற்காகவும் தான்: டிஜிபி

கோவா மாநிலத்திற்கு போதைக்காக மட்டும் மக்கள் வருவதில்லை, கடற்கரை, உணவு, கலசாரம் போன்றவற்றுக்கும் வருகிறார்கள் என்று புதிய மாநில தலைமை இயக்குனர் ஜஸ்பால் சிங் கூறுகிறார். 

ஐபிஎஸ் அதிகாரி இந்திரதேவ் சுக்லாவுக்குப் பதிலாக கடந்த வியாழக்கிழமை புதிய டிஜிபியாகப் பொறுப்பேற்றுள்ளார் ஜஸ்பால் சிங். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 

போதைப்பொருளுக்காக கோவாவை மக்கள் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. இங்கு வரும் மக்கள் இயற்கை, அழகு, கடற்கரைகள், உள்ளூர் உணவு வகைகள், கலாசாரம், இசை போன்றவற்றிற்காக வருகை தருகின்றனர். 

மாநிலத்தில் போதைப் பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கோவா காவல்துறையால் நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கோவாவை மக்கள் போதைக்காக மட்டும் நினைவுகூருவதை நாங்கள் விரும்பவில்லை. போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கை எனக்கு மட்டுமல்ல, எனது முன்னோடிகளுக்கும் முன்னுரிமையாக உள்ளது. 

ஒவ்வொரு காவலர்களும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். போதைப்பொருள் விற்பனையாளர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறார்கள். இதன் காரணமாக அவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு ஏஜென்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com