
கோப்புப்படம்
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் பயணித்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வீரர் ஒருவர் மரணமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் சத்தா முகாம் அருகே இன்று காலை 4.25 மணியளவில் பணிக்காக 15 சிஐஎஸ்எஃப் வீரர்களை ஏற்றுக்கொண்டு ராணுவப் பேருந்து சென்றுள்ளது.
அப்போது திடீரென பேருந்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடனடியாக பேருந்தில் இருந்த வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்தனர். வீரர்களின் தாக்குதலைக் கண்டு பயங்கரவாதிகள் ஓடிவிட்டதாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தாக்குதலில் வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலால் அப்பகுதியில் ரோந்துப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.