நாட்டில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 2,451 பேருக்குதொற்று; 54 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்பு 2,451 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியைக் கடந்துள்ளது.
நாட்டில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 2,451 பேருக்குதொற்று; 54 பேர் பலி

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்பு 2,451 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியைக் கடந்துள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் சில நாள்களாக தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை 2,451 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,52,425 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 54 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.22,116 ஆக உள்ளது.  உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 1,589 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,16,068 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.75 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 14,241 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 சதவிகிதமாக குறைந்துள்ளது.  தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.55 சதவிகிதமாக உள்ளது. வராந்திர தொற்று பாதிப்பு 0.47 சதவிகிதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1,87,26,26,515 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,03,558 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 83,38,25,991 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,48,939 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com