தில்லியின் 'ஆர்' மதிப்பு என்ன சொல்கிறது? ஒருவருக்கு பாதித்தால் அது..

நாட்டின் தலைநகர் புது தில்லியில் கரோனா பாதிப்பு தற்போது தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் 'ஆர்' மதிப்பு தரும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தில்லியின் 'ஆர்' மதிப்பு என்ன சொல்கிறது? ஒருவருக்கு பாதித்தால் அது..
தில்லியின் 'ஆர்' மதிப்பு என்ன சொல்கிறது? ஒருவருக்கு பாதித்தால் அது..

புது தில்லி: நாட்டின் தலைநகர் புது தில்லியில் கரோனா பாதிப்பு தற்போது தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் 'ஆர்' மதிப்பு தரும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அதாவது, புது தில்லியின் 'ஆர்' மதிப்பு 2.1 ஆக உள்ளது. இதன் மூலம், தில்லியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படும் போது, அவர் மூலம் தலா இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுவதாக ஐஐடி சென்னை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒருவருக்கு கரோனா பாதிக்கப்பட்டால், அவர் மூலமாக எத்தனை பேருக்கு கரோனா பாதிக்கிறது என்பதை விளக்குவதுதான் 'ஆர்' மதிப்பு. இந்த 'ஆர்' மதிப்பானது ஒன்றுக்கும் கீழே குறையும் போதுதான் கரோனா பேரிடர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பகிரப்பட்டுள்ளது. அதன்படி, தில்லியின் இந்த வார 'ஆர்' மதிப்பானது 2.1 ஆக உள்ளது. அதே வேளையில், நாட்டின் 'ஆர்' மதிப்பானது தற்போது 1.3 ஆக உள்ளது.

இதன் மூலம் தில்லியில் நான்காவது அலை தாக்கக் கூடுமா என்று கேட்டால், நான்காவது அலை உருவாவது குறித்து தற்போது கணிக்க இயலாது என்பதே பதிலாக உள்ளது.

இதில் குறிப்பாக ஒன்றைத்தான் அறிய வேண்டியுள்ளது, அதாவது, தற்போதைக்கு ஒருவருக்கு கரோனா பாதித்தால் அவர் மூலம் 2 பேருக்கு கரோனா பாதிக்கிறது. ஆனால், மூன்றாவது அலையின் போது கரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கரோனா பாதிக்கிறதா அல்லது பாதிக்கவில்லையா என்பதைத்தான் கண்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட மிக முக்கிய நகரங்களைக் காட்டிலும் தில்லியில் கரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை 1,042 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா உறுதியாகும் விகிதம் 4.64 ஆக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com