சைபர் குற்றங்கள் குறித்து புகாரளிக்க இணையதளம்: பஞ்சாப் காவல்துறை
சைபர் குற்றங்கள் குறித்து புகாரளிக்க இணையதளம்: பஞ்சாப் காவல்துறை

சைபர் குற்றங்கள் குறித்து புகாரளிக்க இணையதளம்: பஞ்சாப் காவல்துறை

சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக சிறப்பு இணையதளம் ஒன்றை பஞ்சாப் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

சண்டிகர்: சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக சிறப்பு இணையதளம் ஒன்றை பஞ்சாப் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இணையதளத்தில், புகார்தாரர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்காமலேயே புகார் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையாளர் வி.கே. பாவ்ரா தெரிவித்துள்ளார்.

சைபர் குற்றங்கள் அல்லது ஆன்லைன் மோசடி என அனைத்து விதமான ஆன்லைன் குற்றங்களையும் இங்கே புகாராகப் பதிவு செய்யலாம், தங்களது புகார் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புகார்தாரர் இந்த இணையதளம் வழியாக கண்காணிக்கவும் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் எவ்வாறு புகாரளிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com