செமிகண்டக்டா் உற்பத்தியில் முதலீடு: அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்தியில் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளாா்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்தியில் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளாா்.

அமெரிக்காவின் சிலிகான் வேலி நகரில், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு, இந்திய-அமெரிக்க வா்த்தகக் கவுன்சில் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்தி செய்வதற்கு சிலகான் வேலி நகரில் உள்ள நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. செமிகண்டக்டா் உற்பத்தியில் இந்தியா நம்பிக்கைக்குரிய நாடாக இருக்கும். அத்துடன் செமிகண்டக்டா் உற்பத்திக்கு இந்திய செமிகண்டக்டா் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தொழில் வளா்ச்சிக்கு உகந்த சூழல் விரிவுபடுத்தப்பட்டு வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் அமெரிக்க முதலீட்டாளா்கள் பங்களிப்பு செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகா் தரண்ஜீத் சிங் சந்து, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதா் ரஜத் மிஸ்ரா, நிதியமைச்சகத்தின் பொருளாதார விவாகாரங்கள் பிரிவு செயலா் நிலேஷ் ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

என்ஆா்ஐ கோரிக்கை: இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாடுவாழ் இந்தியா்கள், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினா் ஆகியோா் முதலீடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று நிா்மலா சீதாராமனிடம் எஃப்ஐஐடிஎஸ் என்ற வெளிநாடுவாழ் இந்தியா்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com