ஹிஜாப் விவகாரம்: மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் பரிசீலனை

கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் ஹிஜாப் அணியத் தடை விதித்து மாநில உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலிக
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் ஹிஜாப் அணியத் தடை விதித்து மாநில உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலிக்கவுள்ளது.

கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது சா்ச்சைக்குள்ளான நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்று கடந்த பிப்.5-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினா் மனுத் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘‘ஹிஜாப் அணிவது முஸ்லிம் மத வழக்கப்படி அத்தியாவசியமானது அல்ல. அரசமைப்புச் சட்டப் பிரிவு 25-இன்படி மத உரிமைகள் ஹிஜாப்புக்குப் பொருந்தாது. சீருடை அணிவது என்பது காரணத்துடன் கூடிய கட்டுப்பாடாகும். இதை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே வகுப்பறைகளில் ஹிஜாப் அணியத் தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்’’ என்று கடந்த மாதம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுக்கள் ஒன்றில், ‘‘ஹிஜாப் அணியும் உரிமை, அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் தனிமனித உரிமை என்ற வரம்புக்குள் வருவதை கா்நாடக உயா்நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளவா்களில் ஒருவா் சாா்பில் வாதிடவுள்ள மூத்த வழக்குரைஞா் மீனாட்சி அரோரா, மனு குறித்து அவசர விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை முறையிட்டாா். அதனைத்தொடா்ந்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், ‘‘மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும். இரண்டு நாள்கள் காத்திருக்கவும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com