தில்லியில் கரோனா அதிகரித்தாலும் தொற்றின் தீவிரம் குறைவு: அமைச்சர் விளக்கம்

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் தொற்றின் தீவிரம் குறைவாகவே உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் தொற்றின் தீவிரம் குறைவாகவே உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், 

தில்லியில் சுமார் 5,000 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மிகக் குறைவாக இருக்கிறது. ஏனெனில் தில்லியில் ஏறக்குறைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். முந்தைய கரோனா அலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால் பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது.  

தில்லியில் தற்போது 10,000 படுக்கைகள் உள்ளன. அவற்றில் 100 படுக்கைகள் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. போதுமான எண்ணிக்கையிலான மருத்துவமனை படுக்கைகளுடன் அரசு தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்போம்' என்றார். 

மேலும், தில்லியில் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு குறித்து பதில் அளிக்கையில், 'தொடர்ந்து நடத்தப்பட்ட செரோ-சர்வேயின் அடிப்படையில், பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தோம், ஆனால், அவர்களுக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான தேவை குறைவாகவே உள்ளது. அதாவது அவர்களுக்கும் தொற்றின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது' என்று தெரிவித்தார். 

மேலும், தில்லியில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com