'உங்கள் மௌனம்..' பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட பகிரங்க கடிதம்

வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள் என்று அரசியலமைப்பு நடத்தைக் குழு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
'உங்கள் மௌனம்..' பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட பகிரங்க கடிதம்
'உங்கள் மௌனம்..' பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட பகிரங்க கடிதம்

வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள் என்று அரசியலமைப்பு நடத்தைக் குழு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டில் உருவாகியுள்ள வெறுப்பு அரசியல் குறித்து 8 முன்னாள் நீதிபதிகள், 97 ஓய்வுபெற்ற அதிகாரிகள், 92 முன்னாள் ராணுவ வீரர்கள் கையெழுத்திட்டு அரசியலமைப்பு நடத்தைக் குழு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

கடிதத்தில் கையெழுத்திட்டிருப்போர் தங்களை, 'அக்கறையுள்ள குடிமக்கள்' என்று குறிப்பிட்டிருப்பதோடு, இந்தக் கடிதத்தின் பின்னணியில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், நாட்டில் வெறுப்புகள் மட்டுமே நிறைந்த ஒரு வெறித்தனத்தை நாங்கள் காண்கிறோம். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் மட்டுமல்ல, நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டதுபோல உள்ளது.

இந்த சமூக அச்சுறுத்தலுக்கு எதிரான உங்கள் மௌனம், காதுகோளாதது போல் உள்ளது என்றும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு வன்முறை கடந்த சில ஆண்டுகளாகவும் மாதங்களாகவும் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்பு அரசியல் ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தில்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீவ் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்ஷங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளராக இருந்த டி.கே.ஏ. நாயர் உள்ளிட்ட 108 பேர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் அவர்கள் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, முன்னாள் அரசு ஊழியர்களான தாங்கள், வழக்கமான இதுபோன்ற கடினமான வார்த்தை உபயோகங்களை பயன்படுத்துவதில்லை. ஆனால், நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் தனித்துவம் மிக வேகமாக சிதைக்கப்படுவதே, எங்களது கோபம் மற்றும் வேதனையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com