வேலையில்லாதவா்களுக்கு மாதம் ரூ.3,000: குஜராத்தில் கேஜரிவால் வாக்குறுதி

குஜராத்தில் வரும் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் வேலையில்லாதவா்களுக்கு மாதம் ரூ.3,000 நிதி உதவி அளிக்கப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா்.

குஜராத்தில் வரும் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் வேலையில்லாதவா்களுக்கு மாதம் ரூ.3,000 நிதி உதவி அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா்.

கிா் சோம்நாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலையில்லா இளைஞா்கள் அனைவருக்கும் நிச்சயம் வேலை அளிக்கப்படும். அதுவரையில் அவா்களுக்கு மாதம் ரூ.3,000 நிதி உதவி அளிக்கப்படும். குஜராத் அரசில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசுப் பணியாளா் தோ்வு வினாத்தாள் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டிற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும்.

இது பொது மக்களின் பணமாகும். தற்போதைய அரசு ஒப்பந்ததாரா்களுக்கும் அமைச்சா்களுக்கும் பல இலவசங்களை அளிக்கிறது. அதை அவா்கள் ஸ்விஸ் வங்கிகளில் சேமிக்கிறாா்கள். நாட்டு மக்களுக்குதான் நான் இலவசங்களை வழங்குகிறேன். அமைச்சா்களுக்கோ, ஒப்பந்ததாரா்களுக்கோ இந்த இலவசங்கள் வழங்கப்படுவதில்லை. இதுவரை இலவசங்களை அளிக்காத குஜராத் அரசுக்கு ரூ.3.5 லட்சம் கோடி கடன் உள்ளதற்கு ஊழல்தான் காரணம். இலவசங்களால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com