ஆந்திரத்தில் தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 50 பேர் பாதிப்பு

விசாகப்பட்டினம் அருகே தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் 50 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
ஆந்திரத்தில் தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 50 பேர் பாதிப்பு


விசாகப்பட்டினம்: ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினம் அருகே தனியார் ஆடை உற்பத்தி ஆலையில் திடீரென  எரிவாயு கசிவு காரணமாக குறைந்தது 50 தொழிலாளர்களுக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திரம் மாநிலம், அனகாபல்லே மாவட்டத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆடை உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆலையின் ஆடை உற்பத்தி பிரிவில் இருந்து திடீரென எரிவாயு கசிவு காரணமாக பணியில் இருந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அடுத்து அடுத்து மயங்கி விழுந்துள்ளனர். 

இதையடுத்து தொழிற்சாலையின் வளாகத்தில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் ஆலையின் வளாக்ததில் உள்ள மற்றவர்களையும் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அனகாபல்லே காவல்துறை கண்காணிப்பாளார் தெரிவித்தார். 

கடந்த ஜூன் மாதம் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது, 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கண்பார்வை, குமட்டல் மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அப்பகுதியில் உள்ள போரஸ் ஆய்வக பிரிவில் இருந்து அம்மோனியா வாயு கசிந்ததாக அதிகாரிகள் சந்தேகித்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள இந்திய கெமிக்கல் டெக்னாலஜியின் நிபுணர்கள் குழு ஆய்வகத்திற்குச் சென்று கசிவுக்கான காரணத்தை கண்டறிய சோதனைகளை நடத்தும் நேரத்தில், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வகத்தை மூட உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com