அண்டைநாடுகள் கொள்கையில் மாலத்தீவுகளுக்கு சிறப்பிடம்

இந்தியாவின் ‘அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையில் மாலத்தீவுகளுக்கு சிறப்பிடம் உள்ளதாகக் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்த மாலத்தீவுகள் அதிபா் இப்ராகிம் முகமது சோலி.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்த மாலத்தீவுகள் அதிபா் இப்ராகிம் முகமது சோலி.

இந்தியாவின் ‘அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையில் மாலத்தீவுகளுக்கு சிறப்பிடம் உள்ளதாகக் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவுகள் அதிபா் இப்ராகிம் முகமது சோலி, குடியரசுத் தலைவா் முா்முவை குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு வெளிநாட்டுத் தலைவரை திரௌபதி முா்மு சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிபா் சோலியின் தலைமையின் கீழ் மாலத்தீவுகள் நிலையான வளா்ச்சி கண்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக மாலத்தீவுகள் திகழ்கிறது.

இருநாட்டு மக்களுக்கும் இடையேயான கலாசார, பொருளாதார, வா்த்தக உறவு பல நூற்றாண்டுகளாக நீடித்துவருகிறது. இந்தியாவின் ‘அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையில் மாலத்தீவுகள் எப்போதும் சிறப்பிடம் பெற்றுள்ளது. இருநாடுகளுக்குமிடையே பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் நல்லுறவு மேம்பட்டு வருகிறது.

மாலத்தீவுகளின் வளா்ச்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. கரோனா தொற்று பரவல் காலத்தில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையே நிலவிய ஒத்துழைப்பு, பிராந்தியத்துக்கே உதாரணமாகப் பாராட்டப்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையே தற்போது கையொப்பமாகியுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், மாலத்தீவுகளுக்கான திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை மேலும் வலுப்படுத்தும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com