சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம்: காங்கிரஸுக்கு அனுமதி மறுப்பு

விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி காங்கிரஸ் நடத்த உள்ள போராட்டத்திற்கு தில்லியில் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 2:47 pm

DIN

விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி காங்கிரஸ் நடத்த உள்ள போராட்டத்திற்கு தில்லியில் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். 

அத்தியாவசிய பொருள்கள் விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு விலையேற்றம், ஜிஎஸ்டி, வேலையின்மை போன்றவற்றை கண்டித்து ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை ஹெரால்டு ஹவுஸ் கட்டடத்தில் இயங்கி வரும் யங் இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை சீல் வைத்தது.

இதனால் தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அதிக அளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சோனியா காந்தி இல்லத்தின் முன்பும் அதிக அளவிலான தொண்டர்கள் கூடுவதால், அப்பகுதியிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. ராஷ்டிரபதி பவனை முற்றுகையிடவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்த நிலையில், அப்பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை காவல் துறை பிறப்பித்துள்ளது.

காவல்துறை அனுமதி மறுத்தாலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.