புது தில்லி: சிவசேனை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு வரும் வரை தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவசேனை கட்சிக்கு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே உரிமைக் கோரும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிர அரசியல் குழப்ப வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது பற்றி திங்களன்று(ஆகஸ்ட் 8) நீதிமன்றம் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா்.
இந்நிலையில், ஷிண்டே தலைமையிலான சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இமாச்சல் முன்னாள் அமைச்சர் பிரவீன் சர்மா காலமானர்
இந்த விவகாரத்தில் எழுந்துள்ள அரசமைப்பு சட்டம் சாா்ந்த பிரச்னைகள் தொடா்பாக, சிவசேனை அதிருப்தி அணியினா் தங்களது பதில்களை மாற்றியமைத்து தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி உதவி ஆணையா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது
பரமத்தி வேலூரில் போதை மாத்திரைகள் விற்ற மேலும் 5 போ் கைது

வெப்படை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



