ராஜஸ்தானில் குறைந்துள்ள மது விற்பனை: ஆனால் இதுமட்டும்?

ராஜஸ்தானில் ஜூலை மாதம் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாகவும், மாறாக பாங்க் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
ராஜஸ்தானில் குறைந்துள்ள மது விற்பனை: ஆனால் இதுமட்டும்?

ராஜஸ்தானில் ஜூலை மாதம் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாகவும், மாறாக பாங்க் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

சிவன் பக்தர்களால் உற்சாகமாகக் கடைப்பிடிக்கப்படும் புனித மாதமாகக் கருதப்படுவது சிரவண மாதம். இந்த மாதத்தில் பெரும்பாலான சிவன் பக்தர்கள் மது அருந்துதல், புலால் உண்பதைத் தவிர்த்து வருகின்றனர். 

இதுகுறித்து பூந்தி மாவட்ட கலால் அதிகாரி மனோஜ் பிஸ்ஸா கூறுகையில், 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. பல இந்துக்கள் தங்கள் மத நம்பிக்கை காரணமாக மதுவைத் தவிர்க்கின்றனர். 

தனது மாவட்டத்தில் சராசரி மாத விற்பனையான 80,000 லிட்டரிலிருந்து கடந்த 16 நாள்களில் 55 ஆயிரம் லிட்டராகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பீர் விற்பனை 3.10 லட்சத்திலிருந்து 1.36 லட்சம் லிட்டராகச் சரிந்துள்ளது. மே, ஜூன் மாதங்களில் பீர் விற்பனை 4 லட்சத்தைத் தாண்டியதாகவும் கூறினார். 

மேலும், மழைக்காலம் என்பதால் சுரங்கங்களில் தண்ணீர் நிரம்பியிருப்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை செய்யாமல் இருப்பதும் சரிவுக்கு காரணமாகும். 

ஆனால், சிவபெருமானுக்குப் பிடித்தமானதாக நம்பப்படும் பாங்கின் விற்பனை உரிமம் பெற்ற கடைகளில் பாதிக்கப்படாமல் உள்ளது என்றும், சில இடங்களில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

பாங்க் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் அமித் சர்மா கூறுகையில், 

பூந்தில் பாங்க் விற்பனை 15-20 சதவீதம் உயர்ந்துள்ளது. மக்கள் பாங்கினை சிவபெருமானுக்குப் படைக்கின்றனர். 

இது, சிரவண காலத்தில் ஒரு சில சிவன் கோயில்களில் பிரசாதமாகவும் விநியோகிக்கப்படுகிறது. வழக்கமாக மது அருந்துபவர்களில் சிலர் சிரவண காலத்தில் பாங்கினை எடுத்துக்கொள்கின்றனர் என்றார். 

இந்தாண்டு சிரவண மாதம் ஜூலை 14-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி பூர்ணிமா அன்று நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com