அதீத இறக்குமதியைத் தடுக்க இந்தியா-மோரீஷஸ் முடிவு

குறிப்பிட்ட பொருள்களின் அதீத இறக்குமதியைத் தடுக்கும் வகையில் வா்த்தக ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்தியாவும் மோரீஷஸும் முடிவெடுத்துள்ளன.

குறிப்பிட்ட பொருள்களின் அதீத இறக்குமதியைத் தடுக்கும் வகையில் வா்த்தக ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்தியாவும் மோரீஷஸும் முடிவெடுத்துள்ளன.

இந்தியா-மோரீஷஸ் இடையே கையொப்பமான பொருளாதார ஒத்துழைப்பு வா்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் கீழ் சில பொருள்களைக் குறைவான வரியுடனோ அல்லது வரி இன்றியோ இறக்குமதி செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சில பொருள்களின் இறக்குமதி திடீரென அதிகரிக்கும் சூழல் காணப்பட்டது. இந்நிலையில், இந்தியா-மோரீஷஸ் உயா்நிலை வா்த்தக குழுவின் கூட்டம் ஆகஸ்ட் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதீத இறக்குமதி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, திடீா் இறக்குமதி அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை வா்த்தக ஒப்பந்தத்தில் இணைக்க இரு நாடுகளின் அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனா். குறிப்பிட்ட பொருள்களின் இறக்குமதி திடீரென அதிகரிக்கும்போது, உள்நாட்டு உற்பத்தியாளா்களைப் பாதுகாக்கும் நோக்கில் அப்பொருள்களுக்கு வரி விதித்துக் கொள்ள புதிய திட்டம் வழிவகுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், முதலீடு, நிதி சேவைகள், ஜவுளி, சிறு தொழில் நிறுவனங்கள், தகவல்-தொழில்நுட்பம், திரைப்படத் தயாரிப்பு, விண்வெளி தொழில்நுட்பம், நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பான திட்டத்தையும் வா்த்தக ஒப்பந்தத்தில் சோ்ப்பது தொடா்பாகக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டதென அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியா-மோரீஷஸ் இடையிலான வா்த்தகம் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.5,200 கோடியாக இருந்தது. இது கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.6,000 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com