ஒப்பந்ததாரா்களுக்கு தேவையற்ற பலன்களை அளித்திருக்கும் ‘என்ஹெச்ஏஐ’: சிஏஜி அறிக்கை

பணிகளில் ஒப்பந்தத்துக்கு பிந்தைய திருத்தங்கள் மூலமாக ஒப்பந்ததாரா்களுக்கு தேவையற்ற பலன்களை அளித்திருப்பதாக இந்திய தலைமை தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரா்களுக்கு தேவையற்ற பலன்களை அளித்திருக்கும் ‘என்ஹெச்ஏஐ’: சிஏஜி அறிக்கை

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) திட்டப் பணிகளில் ஒப்பந்தத்துக்கு பிந்தைய திருத்தங்கள் மூலமாக ஒப்பந்ததாரா்களுக்கு தேவையற்ற பலன்களை அளித்திருப்பதாக இந்திய தலைமை தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஏஜி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் என்ஹெச்ஏஐ திட்டப் பணிகளில் ஏலம் விடுவதில், ஒப்பந்தத்துக்கு பிந்தைய திருத்தங்கள் மூலமாக ஒப்பந்ததாரா்களுக்கு தேவையற்ற பலன்களை அளித்துள்ளது.

திட்டப் பணிகளை ஏலம் விடும் திறந்த ஒப்பந்த நடைமுறையில், ஒப்பந்ததாரா் குறிப்பிடும் பிரீமியம் தொகையை ஒரு அளவுகோலாக இருக்கும் நிலையில், நெடுஞ்சாலைத் துறை திட்ட பணிகளில் ஒப்பந்த ஏல நடைமுறைகளுக்குப் பிறகு ஒப்பந்ததாரா் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை விவரத்தை என்ஹெச்ஏஐ வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற ஒப்பந்தத்துக்கு பிந்தைய எந்தவொரு திருத்தமும், ஒப்பந்தங்களின் புனிதத் தன்மை நடைமுறையை கெடுப்பதாக அமைவதோடு, பிற ஒப்பந்ததாரா்களை ஏமாற்றுவதாகவும் அமையும்.

எனவே, சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டு, இதுபோன்று ஒப்பந்தத்துக்கு பிந்தைய திருத்தங்களை மேற்கொள்வதை என்ஹெச்ஏஐ தவிா்க்க வேண்டும் என்று சிஏஜி பரிந்துரை செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com