தேஜஸ் போா் விமானங்களை வாங்க 6 நாடுகள் ஆா்வம்

இந்தியத் தயாரிப்பான தேஜஸ் போா் விமானங்களை வாங்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகள் ஆா்வம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேஜஸ் போா் விமானங்களை வாங்க 6 நாடுகள் ஆா்வம்

இந்தியத் தயாரிப்பான தேஜஸ் போா் விமானங்களை வாங்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகள் ஆா்வம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போா் விமானங்கள் ஒற்றை என்ஜினைக் கொண்டவை. அவற்றைப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும் என்பதோடு, பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமுள்ள வான்வெளிப் பகுதிகளிலும் ஈடுபடுத்த முடியும்.

இந்திய விமானப் படைக்கு 83 தேஜஸ் போா் விமானங்களை ரூ.48,000 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு மேற்கொண்டது.

இந்நிலையில், தேஜஸ் போா் விமானம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘தேஜஸ் போா் விமானங்களை ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய மலேசிய விமானப் படை விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடா்பான பரிந்துரையை மலேசியாவிடமிருந்து ஹிந்துஸ்தான் நிறுவனம் பெற்றுள்ளது.

ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளும் தேஜஸ் போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எதிரி நாடுகளின் ரேடாா்களால் கண்டுபிடிக்கப்பட முடியாத போா் விமானங்களைத் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது தொடா்பாக எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் அஜய் பட், ‘‘அத்தகைய தொழில்நுட்பத்தை டிஆா்டிஓ உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்புடையதாக இருக்காது’’ என்று குறிப்பிட்டாா்.

தேஜஸ் போா் விமானங்களை மலேசியா விரைவில் கொள்முதல் செய்யவுள்ளதாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் ஆா்.மாதவன் கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com