மாணவிகளின் செயற்கைக்கோள்! விண்வெளித் துறையின் புதிய சாதனை எஸ்எஸ்எல்வி

அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் விண்ணில் பாய்ந்தது.
எஸ்எஸ்எல்வி ராக்கெட்
எஸ்எஸ்எல்வி ராக்கெட்


தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் விண்ணில் பாய்ந்தது.

திட்டமிட்டபடி சென்ற எஸ்எஸ்எல்வி ராக்கெட், செயற்கைக்கோள்களை புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

மேலும், குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் முதல்முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது விண்வெளித் துறையில் புதிய மைல்கல் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அரசுப் பள்ளி மாணவிகளின் கூட்டுழைப்பு, இஸ்ரோவின் குறைந்த எடையுடைய ராக்கெட் என எஸ்எஸ்எல்வி ராக்கெட் பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ளதால், இந்த வெற்றி புதிய சாதனையாகவும் கருதப்படுகிறது. 

வழக்கமாக அதிக எடையுள்ள செய்ற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும். அதிலேயே குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டு வந்தன. 

ஆனால், தற்போது குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களுக்கு பிரத்யேகமாக குறைந்த எடையுடைய எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது.

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். ஆனால், எஸ்எஸ்எல்வி மூலம் 500 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த இயலும்.

அந்தவகையயில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில், 144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோளும், 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில், ஆசாதிசாட் எனும் செயற்கைக்கோள், நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டது.

ஆசாதிசாட்
ஆசாதிசாட்

இந்த இரு செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு  எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதற்காக இன்று அதிகாலை 3.18 மணிக்கு கவுன்டவுன் தொடங்கப்பட்டது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com