
திருப்பதியில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிரிகிபாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காரில் திருப்பதி கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்களுடைய கார் அமராவதி-அனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாசவி பாலிடெக்னிக் அருகே வந்துகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது திடீரென மோதியது.
இதையும் படிக்க- கனமழை: உதகை, குந்தா, கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த குருவம்மா, அணிமிரெட்டி, அனந்தம்மா, ஆதிலட்சுமி, நாகிரெட்டி ஆகிய 5 பேர் பலியானார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.