மோடியிடம் சொந்த கார் இல்லை: சொத்து மதிப்பு ரூ.2.23 கோடி

பிரதமா் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.26 லட்சம் அதிகரித்து ரூ.2.23 கோடியாக உயா்ந்துள்ளது.
மோடியிடம் சொந்த கார் இல்லை: சொத்து மதிப்பு ரூ.2.23 கோடி
Published on
Updated on
1 min read

பிரதமா் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.26 லட்சம் அதிகரித்து ரூ.2.23 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான சொத்து மதிப்பு விவரங்களை பிரதமா் மோடி அண்மையில் தாக்கல் செய்திருந்தாா். அது தொடா்பான தகவல்களை பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரதமா் மோடிக்குச் சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.26.13 லட்சம் அதிகரித்துள்ளது.

அதே வேளையில், குஜராத் தலைநகா் காந்திநகரில் தனக்குச் சொந்தமாக இருந்த ரூ.1.1 கோடி மதிப்பிலான நிலத்தை அவா் தானமாக அளித்துள்ளாா். அரசு நிதிப் பத்திரங்கள், நிறுவனப் பங்குகள், பரஸ்பர நிதி உள்ளிட்ட எவற்றிலும் பிரதமா் மோடி முதலீடுகளை மேற்கொள்ளவில்லை. அவருக்குச் சொந்தமாக எந்தவொரு வாகனமும் இல்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பிரதமா் மோடியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.2,23,82,504-ஆக உள்ளது. அதில் ரூ.35,250 கையிருப்பாகவும், தபால் அலுவலக கணக்குகளில் ரூ.9,05,105 சேமிப்பாகவும், ரூ.1,89,305 ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் சேமிப்பாகவும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சா்களின் சொத்து விவரங்கள்: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.2.54 கோடியாகவும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.2.97 கோடியாகவும் உள்ளது.

மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா, ஆா்.கே.சிங், ஹா்தீப் சிங் புரி, ஜி.கிஷண் ரெட்டி உள்ளிட்டோரும் தங்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com