
பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், தொழிலதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா(62) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை மும்பையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் ர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆப்டெக் லிமிடெட், ஹங்கம்மா டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா. இவர் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் ஆகாஷா ஏர் என்ற குறைந்த செலவில் மும்பை முதல் அலகாபாத் விமான சேவையை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பிரச்னையால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தவர் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானர்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் ர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பாஜகவினரின் அராஜகம் கேவலமானது: அமைச்சர் துரைமுருகன்
Rakesh Jhunjhunwala was indomitable. Full of life, witty and insightful, he leaves behind an indelible contribution to the financial world. He was also very passionate about India’s progress. His passing away is saddening. My condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/DR2uIiiUb7
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உறுதிமிக்கவர். துடிப்பு, நகைச்சுவை மற்றும் நுண்ணறிவு குணங்களைக் கொண்டிருந்தவர், பொருளாதார உலகிற்கு அவர் அளித்துள்ள பங்கை யாராலும் ஈடு செய்ய முடியாது. நிதி உலகில் இணையில்லாத பங்களிப்பை விட்டுச் சென்றுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.
Anguished to learn about the passing away of Rakesh Jhunjhunwala Ji. His vast experience and understanding of the stock market have inspired countless investors. He will always be remembered for his bullish outlook. My deepest condolences to his family. Om Shanti Shanti.
— Amit Shah (@AmitShah) August 14, 2022
அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராகேஷ் ஜுன்ஜுன்வாலாஜியின் மறைவு குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். அவரது பரந்த அனுபவமும், பங்குச் சந்தை பற்றிய புரிதலும் எண்ணற்ற முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. நேர்மறையான கண்ணோட்டம் கொண்ட அவர் எப்போதும் நினைவுகூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.