
தமிழகத்தை சேர்ந்த 8 காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவௌ முன்னிட்டு நாடெங்கும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் தமிழகத்தை சேர்ந்த 8 காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கே. சங்கர், ஈஸ்வரமூர்த்தி, மாடசாமி ஆகிய காவல் துறை அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதாகர், நாகஜோதி, சண்முகபிரியா, ராஜேந்திரன், சபரிநாதன் ஆகிய 5 அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.