தீண்டாமையால் பள்ளி மாணவர் மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜிநாமா

ராஜஸ்தானில் பள்ளி ஆசிரியர் அடித்ததில் 3ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பனாசந்த் மேக்வால் ராஜிநாமா செய்துள்ளார். 
மாணவர் /  காங்கிரஸ் எம்.எல்.ஏ. பனாசந்த் மேக்வால்
மாணவர் / காங்கிரஸ் எம்.எல்.ஏ. பனாசந்த் மேக்வால்


ராஜஸ்தானில் பள்ளி ஆசிரியர் அடித்து 3ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பனாசந்த் மேக்வால் ராஜிநாமா தனது பதவியை செய்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தின் சுரானா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் குடிநீர் பானையைத் தொட்டதற்காக ஆசிரியர் சலில் சிங் என்பவர் மாணவன் இந்திரா மேக்வாலை சரமாறியாக அடித்துள்ளார். 

ஜூலை 20ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஆக. 14) உயிரிழந்தார். 

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவனை ஆசிரியர் அடித்ததில், காயமடைந்த சிறுவன் உயிரிழந்ததால், கொலை முயற்சி மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ராஜஸ்தானில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி காக்கத் தவறியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பனாசந்த் மேக்வால் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவர் பாரன் மாவட்டத்தின் அத்ரு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, 9 வயது பள்ளி மாணவனை ஆசிரியர் அடித்துக் கொன்றுள்ளார். இந்த சம்பவத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். அதனால் நான் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து கொடுமை மற்றும் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com