ராஜ்கோட்டில் அதிர்ச்சி: 4 ஆயிரம் லிட்டர் கலப்பட பால் பறிமுதல்!

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள சோதனைச் சாவடியில் 4 ஆயிரம் லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ராஜ்கோட்டில் அதிர்ச்சி: 4 ஆயிரம் லிட்டர் கலப்பட பால் பறிமுதல்!

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள சோதனைச் சாவடியில் 4 ஆயிரம் லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ராஜ்கோட் துணை ஆணையர் பிரவீன் குமார் மீனா கூறுகையில், 

வாகன சோதனையின் போது ஒரு டிரக்கில் சல்பேட் பாஸ்பேட் மற்றும் கார்பனேட் எண்ணெய்கள் போன்ற ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது. 

தகவலின்படி, கலப்பட பால் வணிகம் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் பின்னணியில் பெரிய இணைப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 4 மாதங்களாகக் கலப்பட பால் விநியோகம் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாகத் தொழிற்சாலையின் இருப்பிடத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். 

முன்னதாக செவ்வாயன்று, நாடு முழுவதும் உள்ள முக்கிய பால் விற்பனை நிலையங்களில் பால் விலையை உயர்த்தின. விலை உயர்வுக்கான முக்கியக் காரணம் உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு எனக் கூறப்படுகிறது. 

அமுல் மற்றும் மதர் டெய்ரி ஆகிய இரண்டும் ரூ.2 உயர்த்தியுள்ளன. இந்த விலையுயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

இந்நிலையில் கலப்பட பால் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com