பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்களை ஆதரிப்பதும் பாஜகவின் அற்ப மனநிலையை காட்டுகிறது. இதுபோன்ற அரசியல் ஈடுபடுவதற்கு வெட்கமாக இல்லையா பிரதமரே? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் 2002-இல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தில் கா்ப்பிணியான பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தினா் 7 பேரைக் கொன்ற வழக்கின் குற்றவாளிகள் 11 போ் தண்டனையை பூா்த்தி செய்ததால் குஜராத் அரசு சுதந்திர நாள் அன்று திங்கள்கிழமை விடுவிப்பதாக அறிவித்தது. சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுதலையான அவா்கள் இனிப்புகள் வழங்கியும் மாலைகள் அணிவித்தும் வரவேற்கப்பட்டனா்.
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்த அந்த மாநில அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சிகள், ‘பெண் சக்தி’ குறித்து சுதந்திர நாள் விழாவில் பிரதமா் மோடி பேசிய சில மணி நேரத்தில், பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் பில்கிஸ் பானு பாலியல் வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுதான் புதிய இந்தியாவின் உண்மை முகம் என்று விமா்சித்தன.
இதையும் படிக்கலாம் | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை?
இந்நிலையில், பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ பேசியதற்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், "உன்னாவ் - பாஜக எம்எல்ஏவை காப்பாற்ற பாடுபட்டார். கதுவா - பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவாக பாஜக பேரணி நடத்தியது. ஹத்ராஸ் - பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு நின்றது. குஜராத் பாலியல் வழக்கு - பலாத்தகாரம் செய்தவர்களுக்கு விடுதலை மற்றும் கௌரவம். இதுபோன்று குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பது. பெண்களுக்கான பாஜகவின் அற்ப மனநிலையை பிரதிபலிக்கிறது. இதுபோன்ற அரசியல் ஈடுபடுவதற்கு வெட்கமாக இல்லையா பிரதமரே? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா

ஸ்லோவாக்கியா நாடாளுமன்றத் தலைவருக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவைப் பரிசளித்த பிரதமர் மோடி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



