உத்தரகண்ட் மேகவெடிப்பு பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் தாமி

டேராடூனின், ராய்ப்பூரில் உள்ள சர்கெட் கிராமத்தில் சர்கெட் கிராமத்தில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். 

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்பூர் தொகுதியில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 

பேரழிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு பேரிடர் மேலாண்மை குழு, எஸ்டிஆர்எப் குழுக்கள் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். 

மேலும் பேரழிவு மேலாண்மை குழு, எஸ்டிஆர்எப் குழு மற்றும் நிர்வாக அதிகாரிகளை உஷார் நிலையில் இருக்குமாறு முதல்வர் தாமி உத்தரவிட்டார். 

சர்கெட் கிராமத்தில் சிக்கியிருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிலர் அருகிலுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

டேராடூனில் நேற்று முதல் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், புகழ்பெற்ற தப்கேஷ்வர் மகாதேவ் கோயில் அருகே தாமசா நதி நிரம்பியுள்ளது. இதனால் மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயிலுக்கும், தப்கேஷ்வர் கோயிலுக்கும் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com