குரூப் 'சி'பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 112 குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 'சி'பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 112 குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Tradesman Mate

காலியிடங்கள்: 112

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கடற்படை அல்லது முப்படைகளில் ஏதாவதொன்றில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டு பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிற்சாலையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், மருத்துவத்தகுதி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடை சி தேதி: 06.09.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com