மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் கவலையளிப்பதாகவும் பேச்சுவார்த்தை மூலமாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தில்லியில் கன்னட பிரதமர் மார்க் கார்னியுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி,
"உலகில் நிலவும் பல்வேறு பதற்றங்கள் நிலவும் சூழ்நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகவே இருக்கிறது. அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு நாங்கள் எப்போதும் அழைப்பு விடுத்து வருகிறோம்.
மேலும், இரண்டு ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து நிற்கும்போது அமைதிக்கான குரல் இன்னும் வலுவடைகிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மூலம் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க இந்தியா எப்போதும் ஆதரவளிக்கிறது.
உலக நாடுகளில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று கூறினார்.
summary
The current situation in West Asia is a matter of deep concern for us: PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேல் - ஈரான் போர்! மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டம்!

நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி

பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று திரும்பியதும் போர் தொடங்கியது! - காங்கிரஸ் எம்.பி.

ஈரான் தலைநகரில் 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல்! - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

