அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சௌதி அரேபியா நாடுகள் மீது ஈரான் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நாடுகளில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு தளம் மற்றும் தூதரகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் தலைமை மதகுரு கமேனி மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டதையடுத்து ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சௌதி அரேபியா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏனெனில் இந்த நாடுகளில் உள்ள பாதுகாப்பு தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
ஈரானின் 61 ஏவுகணைகள் மற்றும் 34 டிரோன்களை வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் மூலமாக அழித்ததாக பஹ்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் முன்னெச்சரிக்கையுடன் உள்ளதாகவும் கூறியுள்ளது.
ஈரானின் தாக்குதலால் துபாய், கத்தார், அபுதாபி, குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
மற்றொரு புறம் ஈரான் மீதும் ஈரான் ஆதரவு நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Summary
Iran attacks Gulf countries including Bahrain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! சௌதி அரேபியா கண்டனம்!

அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையை நிறுத்துவோம்: ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: குவைத், பஹ்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ஈரான்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



